அனல் பறக்க வெளியான அசுரனின் புதிய திரைப்படம் பற்றிய அப்டேட் : கொண்டாடும் ரசிகர்கள்!

அனல் பறக்க வெளியான அசுரனின் புதிய திரைப்படம் பற்றிய அப்டேட்  : கொண்டாடும் ரசிகர்கள்!
  • PublishedJune 22, 2023

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தி படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.

தேரே இஷ்க் மேன் என இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.  இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த புதிய படம் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் தனுஷ் முகத்தில் ரௌத்திரத்துடன் கையில் நெருப்பு பற்றி எரியும் பாட்டிலும்,  வாயில் சிகரெட்டுமாக ஓடி வருகிறார்.

ஆவேசமாக வரும் அவர் உன் கையில் இருக்கும் மருதாணி ஒவ்வொரு முறையும் என்னை காயமாக்குகிறது. உன் நெத்தியில் இருக்கும் பொட்டு என் விதியை அழிக்கிறது. என அவர் பேசும் வசனங்கள், மெய்சிலிரிக்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *