பேத்தி வயது பெண்ணுக்கு லிப்லாக் கொடுத்து அதிர்ச்சி கொடுத்த உதித் நாராயணன்
இந்திய சினிமாவில் பல மொழிகளில் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் உதித் நாராயணன். 4 தேசிய விருதுகள் பெற்ற உதித் நாராயணன், ராஞ்சனா என்பவரை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார். அடுத்த ஆண்டே தீபா என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார் உதித் நாராயணன்.
இந்நிலையில் லைவ் ஷோ நிகழ்ச்சியினை சமீபத்தில் நடத்தி ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். அப்போது பாடல் பாடிய படி இருந்த போது ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க வந்துள்ளார்.
கன்னத்தில் முத்தம் கொடுக்க வந்த அந்த ரசிகையின் கழுத்தை பிடித்து உதட்டில் முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
69 வயதான பாடகர் உதித் நாராயணன், மகள் வயது ரசிகைக்கு இப்படியா செய்வது என்று அவரை விமர்சித்து கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.