விஜே சித்ரா வழக்கின் அதிரடி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.. அதிர்ச்சியில் பெற்றோர்
சின்னத்திரை சீரியல் நடிகையாகவும், விஜே-வாகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த முல்லை கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
இந்நிலையில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி, தன்னுடைய கணவர் ஹேம்நாத்துடன் பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்று தங்கி இருந்த போது, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்ராவின் தற்கொலைக்கு அவருடைய கணவர் ஹேம்நாத் தான் காரணம் என,அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதே போல் ஹேம்நாத் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. விஜே சித்ரா வழக்கில், கைது செய்யப்பட்ட ஹேம்நாத் ஒரு வருட ஜெயில் தண்டனைக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீன் பெற்று வெளியே வந்த பின்னர், ஒரு சில பேட்டிகளில் சித்ராவின் தற்கொலைக்கும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் மற்றும் அண்ணா நகரில் மெஸ் ஒன்றை நடத்தி வரும் குறிஞ்சி செல்வன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2022-ஆம் ஆண்டு பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது ஒரு புறம் இருந்தாலும் கூட, சித்ராவின் கொலை வழக்கில் நசரத் பேட்டை போலீசார் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இது கொலையா? தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
மேலும் இது சம்மந்தமான வழக்கு திருவள்ளூரில் உள்ள மகளிர் மகிலா நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேவதி, சித்ராவை கொலை செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமோ, சாட்சியோ, முகாந்திரமோ இல்லை என்பதை சுட்டி காட்டி… இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சித்ராவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.