‘ஒன்ஸ் மோர்’ படத்தில் இருந்து வெளியானது வா கண்ணம்மா பாடல்
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாக்கியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் இருந்து வா கண்ணம்மா என்கிற பாடல் வெளியாகி உள்ளது.
மாஸ்டர், கைதி, போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் அடுத்தடுத்து ஹீரோ கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில். தற்போது ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி சங்கர் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தில் ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில், விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுளளது.