திடீரென தல அஜித் வெளியிட்ட அறிக்கை – அதிர்ச்சியில் ரசிகர்கள்…

திடீரென தல அஜித் வெளியிட்ட அறிக்கை – அதிர்ச்சியில் ரசிகர்கள்…
  • PublishedDecember 10, 2024

அல்டிமேட் ஸ்டார் என ஆரம்பத்தில் அஜித்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். தீனா படத்துக்குப் பிறகு தல அஜித் என கோஷம் விண்ணை முட்டியது.

ஆனால், திடீரென அப்படியெல்லாம் தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என அஜித் அறிவுறுத்தினார். ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைத்தாலே போதும் என்றார். ஆனால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

அவர்களின் அன்பை வெளிக்காட்டும் விதமாக புதுசாக “கடவுளே அஜித்தே”ன்னு புதிய கோஷத்தை உருவாக்கி உலகளவில் டிரெண்ட் செய்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது அப்படியும் கோஷம் போட வேண்டாம் என அதிரடியாக அஜித் குமார் அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தற்போது அஜித்தின் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அஜித் ரசிகர்களை அமைதியாக்கிவிட்டார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து அஜித் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை வழிநடத்தும் முயற்சியாக அஜித் குமார் அறிவித்திருப்பதை பலரும் வரவேற்று வருகின்றனர்.

“வணக்கம்! சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலை அடைய செய்திருக்கிறது. எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துணியும் உடன்படவில்லை.

எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! – அஜித்குமார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *