‘வட சென்னை 2’ தனுஷ் இடத்தை பிடித்த மணிகண்டன் ?

‘வட சென்னை 2’ தனுஷ் இடத்தை பிடித்த மணிகண்டன் ?
  • PublishedMarch 12, 2025

தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ‘வட சென்னை’. வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம்.

அதிக வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்ற படம்.

அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என கடந்த ஏழு வருடங்களாக ரசிகர்கள், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரிடம் கேட்டு வருகிறார்கள்.

ஆனால், சமீப காலங்களில் வெற்றிமாறன், தனுஷ் இடையேயான நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனால், ‘வட சென்னை 2’ படத்தை வேறு இயக்குனர், வேறு நடிகரை வைத்து தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வெற்றிமாறன் வந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறனின் உதவி இயக்குனரான கார்த்திகேயன் என்பவர் இப்படத்தை இயக்க, ‘குட்நைட், குடும்பஸ்தன்’ படங்களின் நாயகன் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் கூட முடிந்துவிட்டதாம். விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *