‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது..? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்

‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது..?  வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்
  • PublishedMarch 1, 2025

‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ‘வாடிவாசல்’ படத்தை தாணு தயாரிக்க, ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படம் தாமதமானதால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். தற்போது முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *