சின்மயி வைத்த குற்றசாட்டிற்கு…வைரமுத்து சொன்ன வார்த்தை

சின்மயி வைத்த குற்றசாட்டிற்கு…வைரமுத்து சொன்ன வார்த்தை
  • PublishedJune 26, 2025

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயிக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

இதனையடுத்து சமீபத்தில் தக் லைஃப் படத்தின் ஆடியோ லான்சில் முத்த மழை பாடலை பாடி டிரெண்ட்டாகி, சின்மயிக்கு அதிக ஆதரவான கருத்துக்கள் குவிந்தன. இதில் கங்கை அமரன் கூட வைரமுத்து நல்ல கவிஞன், நல்ல மனிதன் இல்லை என்று வெளிப்படையாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் வைரமுத்துவோடு பேசிக்கொண்டிருந்த பொழுது, சின்மயி விவகாரத்தில் ஏன் தொடர் மெளனம் என்ற கேள்வியை கேட்டேன்.

அதற்கு கவிஞர், நான் அரசுக்கும் நீதித்துறைக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். இதனால் தான் இந்த விவகாரத்தில் தான் மெளனம் காப்பதாக தன்னிடம் வைரமுத்து கூறியதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

மேலும் தக் லைஃப் மூலம் சின்மயி மீது கவனம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி வைரமுத்துவை மீண்டும் அவர் பழிவாங்க துவங்கியதாகவும் அதில் கங்கை அமரன் போன்றோர் இணைந்து கொண்டதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *