இந்த ஜென்மத்துல அது நடக்காது… வனிதாவை தவிக்க விட்டு நடந்த திருமணம்

இந்த ஜென்மத்துல அது நடக்காது… வனிதாவை தவிக்க விட்டு நடந்த திருமணம்
  • PublishedFebruary 21, 2024

விஜயகுமார் பேத்தி தியாவின் கல்யாணம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கும்போதே அதற்கு சரிசமமாக வனிதா பேசிய பேட்டிகளும் டிரெண்டாகுகிறது.

வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் பிரச்சனை என்பது கடந்த ஆறு வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. வனிதா டிவிக்கு டிவி உட்கார்ந்து இன்டர்வியூ கொடுக்க அவருடைய மொத்த குடும்பமும் அவரை ஒதுக்கி விட்டது. வனிதா பிரிந்ததற்கு பிறகு நடந்த வீட்டின் முதல் நல்ல விசேஷத்திற்கு கூட அவரை கூப்பிடாமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

அவரை தவிர்த்து மற்றவர்கள் எல்லோரும் கோலாகலமாக அந்த திருமண விழாவில் சந்தோஷமாக இருந்தார்கள்.

கல்யாண பொண்ணு தியாவின் அம்மா அனிதா, கவிதா அருண் விஜய் போன்றவர்கள் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்து கண்ணுக்கு பிறந்தவர்கள். இவர்களுக்கு வனிதா உடன் சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்காது என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் மஞ்சுளா மூலமாக பிறந்த பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி கூட வனிதாவை ஒதுக்குவது தான் இப்போது பெரிய சந்தேகமாக இருக்கிறது.

வனிதா இப்போது பேட்டிகளில் ஸ்ரீ பாப்பா, ப்ரீத்தா, அருண் அண்ணா, அனிதா அக்கா என பேசினாலும் அவருடைய ஆரம்ப காலகட்ட இன்டர்வியூக்களை பார்த்தால் தான் சில உண்மைகள் தெரியும்.

அப்பாவின் பெயரில் இருக்கிற வெறுப்பில் தன்னுடைய சொந்த அக்கா தங்கைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா முன் கொண்டு வந்து விட்டார் வனிதா. அது மட்டும் இல்லாமல் தன்னை பெற்ற தாய் மஞ்சுளாவின் தனிப்பட்ட வாழ்க்கையையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.

ஒருவேளை வனிதாவை மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம் என பிரீத்தா அல்லது ஸ்ரீதேவி யோசித்தாலும், அது கண்டிப்பாக அவர்களுடைய திருமண வாழ்க்கையை பாதிக்கும். பிரீத்தாவின் கணவர் ஹரியை பற்றியும் வனிதா ரொம்ப மோசமாக பேசி இருந்தார்.

இவர்கள் எல்லோருமே தங்களுக்குள் இருக்கும் நெகடிவ்களை மறைத்துவிட்டு ஒரே குடும்ப சட்டகத்தில் பொருந்தி விட்டார்கள். இதைத் தாண்டி வனிதாவை உள்ளே நுழைய வைத்தால், அப்போ வனிதா பேசியது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும் என்ற பயம் தான் இவர்களுக்கு.

வனிதாவும் இதற்கெல்லாம் பயப்படும் ஆள் கிடையாது என்பது எல்லோருக்குமே தெரியும். தியாவின் திருமணத்தை ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக இருப்பது அவருக்கு உள்ளுக்குள் வழியாக இருந்தாலும், பதிலடி கொடுக்க வேண்டும் என்ற இன்ஸ்டாகிராமில் சிங்கம் ஒன்று நடந்து வருவதைப் போல் வீடியோ போட்டு, மொத்த கூட்டமும் ஒரு இடத்தில் ஒன்றாக சேரும் பொழுது, நீங்கள் சிங்கம் போல் தனியாக இருந்தால், எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளாக நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *