விஜய்க்கு வாழ்த்து கூறிய சர்ச்சை நாயகி… கவிழ்த்து விட்ட பேன்ஸ்

விஜய்க்கு வாழ்த்து கூறிய சர்ச்சை நாயகி… கவிழ்த்து விட்ட பேன்ஸ்
  • PublishedOctober 27, 2024

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, இன்று அதன் முதல் மாநாட்டினை கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடத்த ஆயத்தமாகி வருகின்றார்.

இவருக்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், இன்று அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்த்துடன் இருவரும் இணைந்து நடித்த சந்திரலேகா படத்தின் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவுக்கு இணையவாசிகள் செய்த கமெண்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்கள் மிகவும் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொண்டு வரும்படி விஜய் ரசிகர்களுக்கு வலியுறுத்தினார்.

இதுமட்டும் இல்லாமல், பள்ளிக்குழந்தைகள், வயதானவர்களை மாநாட்டிற்கு வரவேண்டாம் எனவும் விஜய் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யுடன் தான் நடித்த சந்திரலேகா படத்தின் படபிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்தப் பதிவினைப் பார்த்த இணையவாசிகள், TVK மகளிர் அணி தலைவி வாழ்க எனவும் தளபதி உங்க கல்யாணத்துக்கு வருவாரா எனவும், வாழ்த்து சொல்ல இந்த போட்டோவைத்தான் யூஸ் பண்ணனுமா எனவும் வனிதாவை வம்புக்கு இழுக்கும் வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். வனிதாவின் இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *