வீர தீர சூரன் படம் செய்திருக்கும் வசூல் இதோ

வீர தீர சூரன் படம் செய்திருக்கும் வசூல் இதோ
  • PublishedMarch 31, 2025

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வீர தீர சூரன்.

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். சித்தா படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஒரு பக்கம் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள ஆவெரேஜ் ஆன வசூல் என பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *