இலங்கையில் வெங்கட் பிரபு… வைரலாகும் வீடியோ…
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பல நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இலங்கையிலும் தளபதி 68 சூட்டிங் நடைபெறும் என கூறப்பட்டது. இதற்காக விஜய் இலங்கை வருவார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதை உண்மையாக்கும் வகையில் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது இலங்கையில் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் தளபதி விஜய், இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒன்று, தற்போதைய விஜய்யின் தோற்றத்தில். மற்றொன்று, சுமார் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த விஜய்யின் தோற்றத்தில். இதற்காக, வயதைக் குறைத்துக் காட்டும் அதிநவீன தொழில்நுட்ப முறையொன்றைப் பயன்படுத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர, பிரஷாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, ஜெயராம், ‘மைக்’ மோகன், அஜ்மல், யோகி பாபு ஆகியோருடன், வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களான வி.டி.வி.கணேஷ், வைபவ், பிரேம்ஜி, ஆகாஷ், அரவிந்த் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
தனது இருபத்தைந்து ஆண்டுகால இசைப் பயணத்தில், இரண்டாவது முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’ படத்துக்கு மட்டுமே யுவன் இசையமைத்திருந்தார்.
.#VenkatPrabhu Spotted In Srilanka 😃#Thalapathy68 Next Schedule ❓#ThalapathyVijay #YuvanShankarRaja pic.twitter.com/NiBAfvWcqg
— Kolly Corner (@kollycorner) December 30, 2023