தினமும் புதுப் புது சர்ப்ரைஸ்களை அள்ளி வீசும் வெங்கட் பிரபு…

தினமும் புதுப் புது சர்ப்ரைஸ்களை அள்ளி வீசும் வெங்கட் பிரபு…
  • PublishedJanuary 8, 2024

நடிகர் விஜய்யின் 68ஆவது படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்துவிடும் என்று வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்

அதற்காக வெங்கட் பிரபு தற்போது இலங்கை சென்றுள்ளார். ஜனவரி இரண்டாம் வராத்தில் விஜய் இலங்கை செல்வார் என்றும் கூறப்படுகின்றது.

https://twitter.com/VP_0ffl/status/1743995006363607146

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானதை அடுத்து, இரண்டாவது போஸ்டர் புத்தாண்டு அன்று படக்குழு வெளியிட்டது.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருந்தது. ஒரு பைக்கில் மாறுபட்ட வேடங்களில் அமர்ந்திருக்கும் 2 விஜய், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரை தளபதியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

அந்த வகையில் தினமும் புதுப்புது அப்டேட்களை வெங்கட் பிரபு வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் தற்போது GOAT படத்திலிருந்து வீடியோ ஒன்றைதனது X தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *