வெங்கட் பிரபுவால் கடுப்பான விஜய் : எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்!

வெங்கட் பிரபுவால் கடுப்பான விஜய் : எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்!
  • PublishedJune 30, 2023

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க,  யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார். அத்துடன் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியே வந்ததும் அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமும் லீக் ஆகி நாலா பக்கமும் காட்டுத் தீ போல் தகவல்கள் பரவ ஆரம்பித்துவிட்டது.

ஆனால் லியோ படப்பிடிப்பு துவங்க ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரை எந்த ஒரு தகவலும் வெளியே வராமல் அவ்வளவு கச்சிதமாக சீக்ரெட்டை மெயின்டைன் பண்ணி வருகிறார்கள்.

ஆனால் தளபதி 68 படத்தின் டிஸ்கசன் மட்டும் தான் இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறது. அதற்குள் ஒவ்வொரு விஷயங்களும் வெளியில் வருவதால் விஜய் உச்சகட்ட கடுப்பிற்கு போய்விட்டார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியே வந்துவிட்டது. அத்துடன் இதே மாதிரி ஒவ்வொரு விஷயமும் வெளியில் போனது என்றால் இந்த ப்ராஜெக்ட்டை இதோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *