‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம் : வெற்றி மாறன் கொடுத்த அதிரடி அப்டேட்

‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம் : வெற்றி மாறன் கொடுத்த அதிரடி அப்டேட்
  • PublishedNovember 11, 2025

சிலம்பரசன் – வெற்றி மாறன் இணையும் ‘அரசன்’ படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் அரசன் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு திகதியைத்தான் வெற்றி மாறன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆண்ட்ரியா மற்றும் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றி மாறன், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24 ஆம் திகதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடிக்கும் படமான ‘அரசன்’, வட சென்னையில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையை மையப்படுத்திய ஒரு படமாகும்.

இதில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஜெரேமியா, நெல்சன் திலீப்குமார் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *