“மனசிலாயோ” மாஸ் டான்ஸ் போடும் “தலைவர்” – வேட்டையன் பராக்

“மனசிலாயோ” மாஸ் டான்ஸ் போடும் “தலைவர்” – வேட்டையன் பராக்
  • PublishedSeptember 9, 2024

கடந்த ஆண்டு இறுதியில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் அந்த திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்தார்.

இப்போது தன்னுடைய “கூலி” திரைப்பட பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி “வேட்டையன்” திரைப்படம் வெளியாகிறது.

அப்படத்தில் இருந்து “மனசிலாயோ” என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையில், இந்த பாடல் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றது.

சுமார் 27 ஆண்டுகள் கழித்து பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனுடைய குரல் இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *