விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை நம்பாதீங்க..

விஜய் ரசிகர்கள் விமர்சனங்களை நம்பாதீங்க..
  • PublishedOctober 11, 2024

சமீப காலமாக வெளியான ரஜினிகாந்த் படங்களிலேயே நல்ல கருத்துள்ள படமாக வேட்டையன் படம் உள்ளது.

இந்த படம் ஒரு நல்ல படம் என அந்தணன் பேசியுள்ள வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வேட்டையன் படத்துக்கு வலைப்பேச்சு டீம் கொடுத்த விமர்சனத்திலும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். ஆனால், ராணா டகுபதியின் அந்த கார்ப்பரேட் வில்லன் போர்ஷனை மட்டும் கொஞ்சம் சரியாக கையாண்டு இருக்கலாம் என்கிற விமர்சனத்தை முன் வைத்தனர்.

விஜய்யின் கோட் படம் வெளியானதும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அந்த படத்தை தோல்விப் படமாக மாற்ற வேண்டும் என படு மோசமாக விமர்சனங்களை கொடுக்க ஆரம்பித்த நிலையில்,

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் வேட்டையன் டிசாஸ்டர் ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தும் சோஷியல் மீடியா விமர்சகர்கள் என்கிற பெயரிலும் வேட்டையன் படம் சொதப்பல் படம் என கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், அதெல்லாம் நம்பாதீங்க என்றும் விஜய் ரசிகர்கள் என்னதான் நைட்டும் பகலுமா பொய் பிரச்சாரம் செய்தாலும் இந்த வேட்டையன் படம் நல்ல படம் தான்.

என்கவுன்ட்டருக்கு எதிரான கருத்துக்களையும், கல்வியில் நடக்கும் மாஃபியாவையும் அழகாக எடுத்து சொல்லி ஒரு தரமான படத்தை ஞானவேல் கொடுத்துள்ளார் என அந்தணன் படத்தை பாராட்டியுள்ளார்.

ஆயுத பூஜை, விஜயதசமிக்கு ரஜினிகாந்த் படத்தை பார்க்கும் குடும்ப ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாற்றத்தான் போகின்றனர். வேட்டையன் திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கத்தான் போகிறது. அதை யாருமே தடுக்க முடியாது என்று அந்தணன் தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது வேட்டையன் படத்துக்கு தனது முழு ஆதரவை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *