விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தானா? வைரலாகும் ஒரு பதிவு..

விசித்ராவின் சினிமா வாழ்க்கை நாசமானது இந்த நடிகரால் தானா? வைரலாகும் ஒரு பதிவு..
  • PublishedDecember 24, 2023

நடிகை விசித்ரா தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 80 நாட்களுக்கு பிறகு போட்டிபோட்டு வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் ஒரு நடிகரால் தான், சினிமாவில் இருந்து விலக காரணம் என்றும் அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

தற்போது கவர்ச்சி நடிகை என்ற ஒரு பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு முன் விசித்ரா பேசிய அந்த நடிகரின் விசயம் பேசுபொருளாக மாறியதை அடுத்து மற்றொரு தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

2019ல் ஒரு ஊடக எக்ஸ் தள பக்கத்தில், தமிழில் முன்னணி நடிகையாக வந்திருக்க வேண்டியது விசித்ரா. ஆனால் சத்யராஜ் மாமாவால் அது போயிடுச்சு என்று குறிப்பிட்டு ஒரு பதிவினை போட்டிருந்தனர்.

இதனை அறிந்த விசித்ரா, சத்யராஜ் சார் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல ரோல் கொடுத்து இருந்தார் என்றும் பதிவு செய்தார்.

மேலும் அந்த காலக்கட்டத்தில் தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால், நல்ல கதாபாத்திரங்கள் என்னால் நடிக்க முடியாமல் போனதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *