த்ரிஷாவின் கையை பிடித்த அஜித்… வைரலாகும் ‘விடாமுயற்சி ஸ்டில்ஸ்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது லைக்கா நிறுவனம், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த படத்தில் நடித்த ஆரவ், அர்ஜுன், த்ரிஷா, ஆகிய பிரபலங்கள் டப்பிங் பணியை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் – த்ரிஷா மற்றும் படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிவிக்கும் விதமாக தற்போது அஜித், த்ரிஷா, மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித் இதில் மிகவும் ஸ்டைலிஷாக கோட் – சூட் அணிந்து யங் லுக்கில் காணப்படுகிறார். த்ரிஷா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மனதை வசீகரிக்கிறார். அஜித் – த்ரிஷா கையை பிடித்து நடந்து வரும் புகைப்படம் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஹாலிவுட் படமான, ‘பிரேக் டவுன்’ என்கிற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அஜித், குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பைய முடித்தார். கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.