விடாமுயற்சி : மார்ச் மாதத்துடன் அனைத்தும் முடிவு

விடாமுயற்சி : மார்ச் மாதத்துடன் அனைத்தும் முடிவு
  • PublishedFebruary 8, 2024

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், அடுத்தகட்ட படிப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக விடாமுயற்சி குழுவினர் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

அதன்பிறகு இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருக்கின்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் மார்ச் மாதத்தோடு விடாமுயற்சி படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழுவில் கூறுகிறார்கள்.

உடனடியாக இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மே மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *