விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு
  • PublishedJuly 22, 2024

துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இரண்டுவருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்த முக்கியதான தகவலை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்தது.

இதைத் தொடர்ந்து படக்குழு விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளபக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது என்று படக்குழுவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *