விடுதலை 2 – முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

விடுதலை 2 – முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
  • PublishedDecember 21, 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 நேற்று வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடித்திருந்த இப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகின்றன.

முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியார் காவல்துறையிடம் சிக்குவார். அதன் தொடர்ச்சியாக வரும் இரண்டாம் பாகத்தில் அவருடைய கதை விரிவாக காட்டப்பட்டிருக்கிறது.

இதில் பெருமாள் வாத்தியார் யார்? அவருடைய மக்கள் இயக்கம் எப்படி உருவானது? அவருடைய குடும்பம் என அனைத்தையும் வெற்றிமாறன் தன்னுடைய ஸ்டைலில் காட்டியிருக்கிறார்.

அதற்கு உயிர் கொடுப்பது போல் விஜய் சேதுபதியின் நடிப்பு வழக்கம்போல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் மஞ்சு வாரியர் டஃப் கொடுக்கும் வகையில் நடித்துள்ளார்.

சூரியை பொறுத்தவரையில் இரண்டாம் பாகத்தில் பெரிய அளவில் வேலை இல்லை. இருந்தாலும் இவர்களின் கூட்டணி தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.

இதை வைத்து பார்க்கும் போது வசூலும் ஏறு முகம் தான். ஏற்கனவே டிக்கெட் புக்கிங் முதல் நாளில் மட்டும் இரண்டு கோடி ரூபாயை தாண்டி இருந்தது.

அதை அடுத்து தற்போது முதல் நாள் வசூல் உலக அளவில் 7.25 கோடிகளாக உள்ளது. இது தோராயமாக கணிக்கப்படும் வசூல் தான். தயாரிப்பு தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.

இருப்பினும் இரண்டாவது நாளான இன்றும் படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் வார இறுதி, பள்ளி விடுமுறை என தொடர்ந்து வருகிறது.

இதுவும் சாதகமாக அமைந்த நிலையில் நிச்சயம் விடுதலை 2 இந்த வருடத்தின் வெற்றிப்பட வரிசையில் இணைந்து விடும் என தெரிகிறது. இதனால் பட குழுவும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *