விடுதலை 2 வசூல் விபரம் – வெற்றிமாறன் படத்துக்கே இந்த நிலையா?

விடுதலை 2 வசூல் விபரம் – வெற்றிமாறன் படத்துக்கே இந்த நிலையா?
  • PublishedDecember 23, 2024

தமிழ் சினிமாவில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். அவர் இதுவரை 7 படங்கள் இயக்கி உள்ளார். அந்த 7 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள 8-வது படம் தான் விடுதலை.

இப்படத்தின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சூரி, நடிகை மஞ்சு வாரியர், இயக்குனர்கள் ராஜீவ் மேனன் மற்றும் கெளதம் மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

விடுதலை 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் முதல் பாகத்தில் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்த வெற்றிமாறன்.

இப்படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கேரக்டரை முன்னிலைப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தார். இதில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

விடுதலை 2 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் முதல் பாகத்தைப் போல் இல்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. இப்படத்தில் புரட்சி கொஞ்சம் தூக்கலாக இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

மற்றபடி படத்தின் வசனங்கள் அனைத்தும் தூக்கலாக இருப்பதால் இப்படத்தை பற்றிய விவாதங்களும் ஒருபுறம் நடந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

விடுதலை 2 திரைப்படம் முதல் 2 நாட்களில் இந்திய அளவில் ரூ15 கோடியும், உலகளவில் ரூ.20 கோடியும் வசூலித்திருந்த நிலையில், மூன்றாம் நாளான நேற்று இப்படத்தின் வசூல் சற்று சரிவை சந்தித்துள்ளது. நேற்று இந்திய அளவில் இப்படம் ரூ.7.6 கோடி வசூலித்துள்ளது.

இது விஜய் சேதுபதியின் முந்தைய படமான மகாராஜா படத்தைவிட கம்மியாகும். மகாராஜா படம் மூன்றாம் நாளில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. ஆனால் விடுதலை 2 அதைவிட 2 கோடி கம்மியாக வசூலித்து இருக்கிறது. இதே நிலை நீடித்தால் விடுதலை 2 படம் 100 கோடி வசூலை எட்டுவது கடினம் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *