விடுதலை 2 படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் விமர்சனம்

விடுதலை 2 படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் விமர்சனம்
  • PublishedDecember 20, 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சூரி கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பின்னர் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

விடுதலை 2 திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

விடுதலை 2 வெற்றிமாறனின் கல்ட் கிளாசிக் படம். இப்படத்தை விஜய் சேதுபதியை மற்றொரு பரிணாமத்தில் பார்க்கலாம். என்ன ஒரு நடிகர், இப்படத்திற்காக வெற்றிமாறனுக்கு அடுத்த தேசிய விருது வரலாம். ஸ்பாயிலர்ஸ் வரும் முன் படத்தை பார்த்துவிடுங்கள். சிறந்த சினிமா அனுபவமாக விடுதலை 2 இருக்கும் என சிலர் பதிவிட்டுள்ளார்.

விடுதலை 2 வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ். துணிச்சல் மிகுந்த புரட்சிகரமான படத்தை ராவாக கொடுத்திருக்கிறார்கள். துல்லியமாக இயக்கி இருக்கிறார். இது சுதந்திரத்திற்கான மனித விலை, ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்பிற்கு இடையிலான மோதலை பற்றி ஆழமாக ஆராயும் படமாக உள்ளது.

விடுதலை படத்தின் முதல் பாகம் எங்கு முடிந்ததோ, அங்கு இருந்து படம் தொடங்குகிறது. நிகழ்கால காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. அது விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிக்குள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது. கதை மிகவும் ஆழமாக செல்வது ஒரு கட்டத்தில் பின்னடைவாகிறது. அதையும் குறைசொல்ல முடியாது. ஏனெனில் படத்திற்கு அது தேவை என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை 2 படத்தின் முதல் 30 நிமிடம் பயங்கரமாக உள்ளது. விஜய் சேதுபதி மிளிர்கிறார். டயலாக்ஸ் மற்றும் ஆக்சன் காட்சிகள் பக்கா. அதிகளவிலான புரட்சி உள்ளது. ஆனாலும் சுவாரஸ்யமாக படம் செல்கிறது என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *