தக தகனு மின்னும் சிவப்பு ஆப்பிள் போல வித்தியா பாலன்.. வைரலாகும் வீடியோ

தக தகனு மின்னும் சிவப்பு ஆப்பிள் போல வித்தியா பாலன்.. வைரலாகும் வீடியோ
  • PublishedMay 5, 2024

வித்யா பாலன் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார்.

சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார்.

பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார்.

மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ஹே பேபி (2008) மற்றும் பூல் பூலையா (2008) ஆகிய படங்களில் நடித்தார். அதில் பூல் பூலையாவில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான பாவுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 59வது தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

இப்படி இருக்கையில் இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தலை காட்டியிருக்கின்றார். அதிலும் கமலாசனின் ஹேராம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த வகையில், தற்போது வித்தியா பாலன் தமிழ் பாடல் ஒன்றுக்கு அதுவும் பழைய பாடல் ஒன்றுக்கு “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்ததேலா?” என்ற பாடலுக்கு அழகாக நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *