நயன்தாரா இல்லாமல் விக்கி செய்த வேலையைப் பாருங்கள்…

நயன்தாரா இல்லாமல் விக்கி செய்த வேலையைப் பாருங்கள்…
  • PublishedDecember 15, 2023

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன், தல அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… அஜித்துக்கு விக்கி கூறிய கதை திருப்தியளிக்காததால், இப்படத்தில் இருந்து அவரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதை உறுதி செய்தது லைகா நிறுவனம்.

இதை தொடர்ந்து தன்னுடைய மனைவி நயன்தாரா துவங்கியுள்ள நிறுவனங்களில் பணிகளிலும், தயாரிப்பு நிறுவன பணிகளிலும் பிசியாக இருந்த விக்கி… தற்போது இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு பூஜை போட்டுள்ளார். இப்படத்தின் பூஜை சென்னையில் எளிமையாக போடப்பட்டுள்ளது.

மேலும் இதில் தயாரிப்பாளர் லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

ஏற்கனவே இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகிவிட்ட போதிலும், இன்றைய தினம் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் நடிக்க உள்ள இந்த படத்திற்கு LIC என படக்குழு பெயரிட்டுள்ளது. லவ் டுடே படம் போலவே இப்படமும்… இளம் ரசிகர்களை கவரும் விதத்தில்… 2கே கிட்ஸ் காதல் கதையம்சத்துடன் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *