மர்ம நபர்களால் மகிழ்ச்சியாக இருந்த விக்னேஷ் சிவன்

மர்ம நபர்களால் மகிழ்ச்சியாக இருந்த விக்னேஷ் சிவன்
  • PublishedApril 1, 2023

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் கணக்கை முடக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தின் ஏகே 62 வது படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கதை அஜித்துக்கு ஒத்து வராததால், ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும் ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விக்னேஷ் சிவன் பிரபல பாலிவுட் நடிகரை வைத்து பேன் இந்தியா படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நயன்தாரா மூலம் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. சர்கில் என்ற ஹேக்கர்ஸ் விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கத்தை முடக்கி வைத்திருந்தனர்.

தற்போது தனது டிவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு இருப்பதை தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், “கடந்த ஒரு வாரமாக நான் மிகவும் நிம்மதியாக இருந்தேன், என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு மிக்க நன்றி., இதேபோல் அப்பப்ப பண்ணுங்க” என்று குறிப்பிட்டு தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் .

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *