விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ராம்சரண்!

விஜய், அஜித்தை ஓரம் கட்டிய ராம்சரண்!
  • PublishedMarch 27, 2023

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமின்றி ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார்.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு முன்னர் வரை ராம்சரண் 35 முதல் 40 கோடி வரை தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதன் பிறகு இப்போது அவருடைய சம்பளம் 100 கோடியை தாண்டியுள்ளது. இதனையடுத்து அவருடைய சொத்துமதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராம்சரணின் சொத்து மதிப்பு ரூபாய் 1300 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் ராம்சரண் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் என்பதால் அவரது சொத்துக்களும் அப்படியே இவருக்கே வந்து சேரும். அது மட்டுமல்ல ஹைதராபாத்தில் 25 ஆயிரம் சதுர அடி கொண்ட பிரம்மாண்டம் வீட்டில் வசித்து வருகிறார் . இந்த வீடு சுமார் 40 கோடி பெரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *