மிரட்டலாக வெளியான ராம் சரணின் RC15 ஃபர்ஸ்ட் லுக்… ஷங்கர் ரிட்டர்ன்ஸ் உறுதி!

மிரட்டலாக வெளியான ராம் சரணின் RC15 ஃபர்ஸ்ட் லுக்… ஷங்கர் ரிட்டர்ன்ஸ் உறுதி!
  • PublishedMarch 27, 2023

தெலுங்கு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்து வரும் RC15 படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷங்கர் இயக்கி வந்த RC15 டைட்டில் Game Changer என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

ராம் சரணின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு RC15 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ராம் சரணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கிய RRR திரைப்படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார் ராம் சரண். குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற பின்னர் ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். இந்நிலையில், இன்று 38வது பிறந்தநாள் கொண்டாடும் ராம் சரணுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறிவருகின்றனர். இதனையடுத்து அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அவர் நடித்து வந்த RC15 படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்பட்டது.

ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் RC15 படத்திற்கு கேம் சேஞ்சர் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ராம் சரணின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முழுவதும் கிரே ஷேடில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில் பைக் மீது செம்ம ரக்கட் பாய் லுக்கில் அமர்ந்திருக்கிறார் ராம் சரண். அதேபோல் ஹேர் ஸ்டைலும் ப்ளே பாய் லுக்கில் மாஸ் காட்டுகிறது. கூலர்ஸ் போட்டு பைக்கில் இருந்து ராம் சரண் இறங்குவது போல இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தில் ராஜூவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியலை மாற்றியமைக்கும் கிங் மேக்கர் போன்ற கேரக்டரில் ராம் சரண் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில், கிங் என்ட்ரியாகும் போது அரசியல்வாதிகள் அதிர்வதைப் போல காட்டப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் படத்தில் ராம் சரணின் கேரக்டர் அரசியல் ஆட்டத்தை தீர்மானிக்கும் ஒருவனாக கிரே ஷேடில் நடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

2018ம் ஆண்டு வெளியான 2.O படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷங்கர் இந்தப் படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். அதற்கு ஏற்றபடி தரமான கமர்சியல் பேக்கேஜ்ஜாக கேம் சேஞ்சர் படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. டைட்டில், ராம் சரண் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, இன்னும் ரிலீஸ் திகதியை அறிவிக்கவில்லை. ஆனாலும், டைட்டில், ராம் சரண் லுக் வெளியானதால், இனிமேல் அடுத்தடுத்து ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ரிலீஸ் திகதி போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *