ஆஸ்கார் நாயகனையே தட்டித் தூக்கிய விஜய்… வசூலில் பட்டையை கிளப்பும் லியோ

ஆஸ்கார் நாயகனையே தட்டித் தூக்கிய விஜய்… வசூலில் பட்டையை கிளப்பும் லியோ
  • PublishedOctober 23, 2023

லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இப்படத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் நடித்திருந்தனர். ரொம்பவே ஆர்ப்பாட்டம் இல்லாத கதைக்கு அழகாக மெருகேற்றி இருந்தார் லோகேஷ்.

லியோ படத்தின் முன்வியாபாரமே கிட்டத்தட்ட 450 கோடி வரை என பேச்சுகள் எழுந்தது.

படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 120 கோடி ரூபாயிற்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முதல் நாளே ஜெயிலர் வசூலை லியோ பீட் செய்தது. இந்நிலையில் இந்த வாரத்தில் இன்னொரு சாதனையை செய்து இருக்கிறது.

ஆஸ்கார் விருது வாங்கிய லியனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளிவந்த கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படத்தின் வசூலை முந்தி இருக்கிறது.

அந்த வகையில் க்ளோபல் பாக்ஸ் ஆபிஸில் லியோ படம் 48.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இதில் காப்ரியோ படம் 44 மில்லியன் டாலர் தான் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *