பிரபல வாரிசு நடிகைக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கிக் கொடுத்த விஜய்… யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல வாரிசு நடிகைக்கு ஐபிஎல் டிக்கெட் வாங்கிக் கொடுத்த விஜய்… யார் அந்த நடிகை தெரியுமா?
  • PublishedMay 9, 2024

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகின்றார்.

கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்தினை இயக்குவது யார் என்பது குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் விஜய் தனக்கு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி தந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கு தான் நடிகர் விஜய் டிக்கெட் ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுத்துள்ளார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்,

“நான் பார்த்த முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட் வாங்கி கொடுத்ததே தளபதி விஜய் தான்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *