“விஜய் மீண்டும் வந்துவிடுவார்…” ஆருடம் சொல்லும் தயாரிப்பாளர்..

“விஜய் மீண்டும் வந்துவிடுவார்…” ஆருடம் சொல்லும் தயாரிப்பாளர்..
  • PublishedFebruary 22, 2024

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்று அறிவித்துவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

அநேகமாக அவரது கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அளித்திருக்கும் பேட்டி விஜய் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

“விஜய்யை நாம் பெரிதாக எல்லாம் மிஸ் செய்யமாட்டோம். 2025ஆம் ஆண்டு விஜய்யின் 69ஆவது படம் கண்டிப்பாக ரிலீஸாகிவிடும்.

அதன் பிறகு 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வேலைகளை அவர் கவனிப்பார். அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைந்துவிட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவைப்பார்.

அப்படி நடக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார் அவ்வளவுதான்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *