இலங்கை வந்தார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கை வந்தார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா… வைரலாகும் புகைப்படங்கள்
  • PublishedJuly 8, 2024

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார்.

தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது நாக் அஸ்வினின் புராண அறிவியல் கதையான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் அர்ஜூனன் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விடி12’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘ஜெர்சி’ படத்தின் மூலம் பிரபலமான கவுதம் தின்னனுரி இயக்குகிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வந்துள்ளது. இதை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *