திருமண அறிவிப்பை வெளியிட தயாராகும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா?

திருமண அறிவிப்பை வெளியிட தயாராகும் ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா?
  • PublishedJanuary 8, 2024

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

டோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரீல் ஜோடி என்றால் அது ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் தான். இவர்கள் இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படம் கீதா கோவிந்தம்.

அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் காவாலே பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது. அப்பாடலைப் போல் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா இடையேயான கெமிஸ்ட்ரி தான்.

இதன் காரணமாகவே அவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் வெற்றிக்கு பின்னர் டியர் காம்ரேட் என்கிற திரைப்படத்திலும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் வெற்றியடைந்த கையோடு, இவர்கள் இருவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்களும் உலாவரத் தொடங்கின.

இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் 2019-ம் ஆண்டே செய்திகள் வெளியாகின. பின்னர் இதனை இருவருமே மறுத்து, தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என விளக்கம் அளித்தனர்.

இந்த விளக்கத்துக்கு பின்னரும் இவர்களைப் பற்றி காதல் வதந்தி குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் இருவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் தான். ஒரே இடத்தில் இருந்து இருவரும் தனித்தனியாக போட்டோ வெளியிட்டாலும் அதை ரசிகர்கள் தெளிவாக கண்டுபிடித்து அவர்கள் காதலிப்பதால் தான் ஜோடியாக புகைப்படம் வெளியிட தயங்குகிறார்கள் என கிளப்பிவிட்டனர். சில சமயங்களில் இருவரும் ஜோடியாக ஓட்டல்களுக்கு உணவருந்த சென்ற புகைப்படங்களும் கசிந்தன.

இப்படி கடந்த 5 ஆண்டுகளாக ஹாட் டாப்பிக் ஆக இருந்து வரும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா காதல் தற்போது மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளது.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. காதலர் தின பரிசாக அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *