இலங்கையில் எடுக்கப்பட இருந்த GOAT படத்தின் கிளைமேக்ஸ் எங்க எடுக்க போறாங்க தெரியுமா?

இலங்கையில் எடுக்கப்பட இருந்த GOAT படத்தின் கிளைமேக்ஸ் எங்க எடுக்க போறாங்க தெரியுமா?
  • PublishedMarch 13, 2024

நடிகர் விஜய் தி கோட்(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68-வது படம் ஆகும்.

தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெட்கட்புரபு முதன்முறையாக இணைந் துள்ளனர்.
தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளது.

கிளைமேக்ஸ் காட்சிகள் முதலில் இலங்கையில் எடுக்க படக்குழுவினர் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த காட்சிகள் திருவனந்த புரத்தில் எடுக்கப்படுகிறது.

அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வருகிற 18-ந்தேதி கேரளா செல்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் காரியவட்டத்தில் உள்ள கிரீன்பீல்டு மைதானம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் இரவிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அவரது வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப் பிற்காக நடிகர் விஜய் முதன் முறையாக திருவனந்த புரத்துக்கு வர உள்ளார். படப்பிடிப்புக்காக திருவ னந்தபுரம் வரும் நடிகர் விஜய், அங்கு ரசிகர்களை யும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *