ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’: அதிகாரபூர்வ அறிவிப்பு..

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘லியோ’: அதிகாரபூர்வ அறிவிப்பு..
  • PublishedNovember 20, 2023

தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘லியோ’.

இந்த படம் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் 500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற லியோ திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *