தளபதியின் புது பயணம், வரலாற்றை உருவாக்குமா.?
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது.. இதற்காக மாத கணக்கில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தற்போது விஜய் தன்னுடைய புது பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அவருக்கு உதயநிதி ஸ்டாலின் உட்பட அரசியல் பிரபலங்களும் பிரபு, விஜய் சேதுபதி, சசிகுமார், சூரி என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அலைகடலென திரண்டு வந்த மக்களை பார்க்கும் போது விஜய் எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கின்றனர்.
இது தானா சேர்ந்த கூட்டம் ஒரு மனிதனின் எழுச்சி படை என விஜய் ரசிகர்களும் ஆரவாரம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படி மக்கள் வெள்ளத்தில் ராஜ நடை போட்டு வந்த விஜய் தொண்டர்கள் பறக்கவிட்ட கட்சி கொடியை மாலையாக தன் தோளில் போட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடி மேடைக்கு வந்து கொடியையும் ஏற்றியுள்ளார்.
அதோடு கட்சியின் கொள்கை குறித்து விஜய் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கூறிய திருவள்ளுவர் வழியில் நம் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வழிகாட்டிகளாக இவர்களை ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
https://x.com/polimernews/status/1850543748209598549
அதன்படி பெரியார் காமராஜர் அம்பேத்கர் வேலு நாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகியோர்களின் வழியில் சாதி மத இன பாகுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையோடு உங்களுக்காக உழைக்க நான் வரேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுவே அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய்க்கு வெள்ளி வீரவால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்மத புனித நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி ஆரவாரத்துடன் தன்னுடைய புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார் தளபதி.
இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இந்த மாநாட்டின் முடிவில் தெரிந்து விடும். அதேபோல் 2026 தேர்தலுக்கு இதுவே ஒரு முன்னோட்டம் என தொண்டர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். ஆக மொத்தம் விஜயின் இந்த அரசியல் பயணம் புது வரலாற்றை உருவாக்குமா என பார்ப்போம்.