சோசியல் மீடியாவில் வைரலானது தளபதியின் அம்மா ஷோபாவின் வீடியோ

சோசியல் மீடியாவில் வைரலானது தளபதியின் அம்மா ஷோபாவின் வீடியோ
  • PublishedDecember 11, 2023

ஒரு காலத்தில் பாடகி சோபாவின் மகன் விஜய் என்கின்ற நிலை மாறி, இன்று தளபதி விஜய் அவர்களின் அம்மா சோபா சந்திரசேகர் என்ற நிலை வந்துள்ளது. இதைவிட ஒரு தாய்க்கு மிகச்சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.

பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுடைய மனைவி தான் பாடகியும், இயக்குனரும், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகர். கடந்த 1967வது ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடகியாக வளம் வந்தவர் தான் அவர்.

தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து அவருடைய ரசிகன், விஷ்ணு, ஒன்ஸ்மோர், சிவகாசி, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் ஷோபா. இன்னிசை மழை மற்றும் நண்பர்கள் என்கின்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ள ஷோபா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பந்தயம் என்கின்ற திரைப்படம் துவங்கி சுமார் 9 திரைப்படங்களை தயாரித்தும் வழங்கி உள்ளார்.

தற்பொழுது மகன் தளபதி விஜய் அவர்களுடன் முழுநேர ஓய்வில் இருக்கும் ஷோபா சோனியா விக்ரம் என்பவருடன் இணைந்து ஒரு பிரபல ரீல்ஸ் ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக அது பரவி வருகிறது. தளபதியின் ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் நாடு அரசு இசை கல்லூரியில் இணைந்து படித்து பட்டம் பெற்ற பாடகி ஷோபா, வீணை இசை கருவியை வாசிப்பதில் முறையான பயிற்சி பெற்றவர் ஆவார். பல மேடைகளில் அவர் பாடல்களை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *