மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகளை அதிர வைத்த தலைவர் விஜய்

மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகளை அதிர வைத்த தலைவர் விஜய்
  • PublishedMarch 28, 2025

இன்று ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் விஜய் பக்கம் தான் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது.

அதில் பேசிய தலைவர் விஜய் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கும் துயரங்கள் அத்தனையும் அவர் லிஸ்ட் போட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் தமிழர்கள்னா உங்களுக்கு ஏன் ஜி அலர்ஜி என மத்திய அரசையும் சைடு கேப்பில் தாக்கினார்.

தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கிற ஜிஎஸ்டி காசு வேணும். ஆனா எங்களுக்கு நிதி கொடுக்க மாட்டீங்க. படிக்கிற பிள்ளைகளுக்கு தேவையான நிதிய ஒதுக்கவும் மாட்டீங்க.

ஆனா மும்மொழி கொள்கை பற்றி பேசுவீங்க. பார்த்து ஜி தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ பேருக்கு தண்ணி காட்டியிருக்காங்க. பார்த்து பண்ணுங்க சார் என நக்கலாக பேசினார்.

மேலும் உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு பயமான்னு கேக்குறீங்க. மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சின்னு சொல்றோம். இதுக்கு மேல என்ன வேணும் என்று கூறி மோடி ஜி அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என்றார்.

நீங்க தானே கேட்டீங்க இந்தாங்க வெச்சுக்கோங்க என அவர் கிண்டலாக பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது.

இப்படியாக விஜய் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல் ரசிகர்களும் மக்களும் இதுவரை அவர் பேசியதிலேயே இதுதான் அல்டிமேட் என பாராட்டி வருகின்றனர்.

நீங்க தேர்தல்ல ஜெயிக்கிறீர்களோ இல்லையோ. ஆனா இப்படி பேசிக்கிட்டே இருங்க கேக்குறதுக்கு ஜாலியா இருக்கு என நெட்டிசன்கள் ஒரு பக்கம் கமென்ட் போட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *