சங்கீதா உடன் விவாகரத்தா? சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய்

சங்கீதா உடன் விவாகரத்தா? சர்ச்சைகளுக்கு சைலண்டாக எண்ட் கார்டு போட்ட விஜய்
  • PublishedSeptember 6, 2024

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரை நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை தவறாமல் ஆடியோ லாஞ்சுக்கு அழைத்து வந்துவிடுவார். ஆனால் அதன்பின்னர் வெளியான வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, லியோ சக்சஸ் மீட் போன்றவற்றிற்கு விஜய் மனைவி இன்றி சிங்கிளாகவே வலம் வந்தார்.

இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் விஜய் உடன் ஏற்பட்ட சண்டையால் தான் சங்கீதா லண்டனிலேயே இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.

இந்த விவாகரத்து சர்ச்சை உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக வெளிநாட்டில் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பயில்வான் உள்பட சில பத்திரிகையாளர்கள் குண்டை தூக்கிப் போட்டனர்.

இது போதாது என்று விஜய் வீடருகே நடிகை கீர்த்தி சுரேஷ் குடியேறியதால் அவரையும் விஜய்யுடன் ஒப்பிட்டு சிலர் பேசத் தொடங்கினர். அண்மையில் கீர்த்தி சுரேஷும் விஜய் கட்சியில் சீட் கேட்டு ஒரு பேட்டியில் பேசியதால், அடுத்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ரேஞ்சுக்கு விமர்சிக்க தொடங்கினர்.

இப்படி த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என விஜய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகைகள் பட்டியலை அடுக்கிக் கொண்டே சென்ற நிலையில், இதற்கெல்லாம் சைலண்டாக எண்ட் கார்டு போட்டுள்ளார் தளபதி.

நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தன்னுடைய பேமிலியுடன் சேர்ந்து கோட் படத்தை பார்த்தாராம். சென்னை அடையாறில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் விஜய்யின் குடும்பத்தினருக்காக கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாம்.

அப்போது விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் சாஷா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் சேர்ந்து படம் பார்த்தாராம். இந்த நிகழ்வின் போது கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

கோட் படம் விஜய் பேமிலிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். குறிப்பாக விஜய்யின் மனைவி சங்கீதா படம் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

தன் மனைவி சங்கீதாவுடன் கோட் படம் பார்த்ததன் மூலம் த்ரிஷா உடனான ரிலேஷன்ஷிப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி தன்னைப்பற்றிய விவாகரத்து சர்ச்சைக்கும் எண்ட் கார்டு போட்டுள்ள அவர், தான் மனைவியோடு ஹாப்பியாக உள்ளதையும் சூசகமாக சொல்லி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *