தியேட்டரில் தோல்விக்கண்டாலும், சர்வதேச அளவில் அங்கிகாரத்தை பெற்ற விஜய் சேதுபதி படம்!

தியேட்டரில் தோல்விக்கண்டாலும், சர்வதேச அளவில் அங்கிகாரத்தை பெற்ற விஜய் சேதுபதி படம்!
  • PublishedApril 20, 2023

நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக கிடைக்கும் படங்கள் எல்லாவற்றையுமே கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். அதில் சில படங்கள் மாபெரும் வரவேற்பு பெற்றாலும் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்த படங்கள் தொடர்ந்து சோடை போய் வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படம் ஒன்று மிகப்பெரிய தோல்வி அடைந்தது. விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் என்றால் அது சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மாமனிதன் திரைப்படம் தான் இவ்வாறு படுதோல்வியடைந்தது.

15 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்ட இந்த படம் ஐந்து கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இருப்பினும் இந்த படத்திற்கு  சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.   சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விழாவிலும் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் என்ற விருதினை மாமனிதன் படம் பெற்றுள்ளது. மேலும் பல விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *