மீண்டும் மக்கள் செல்வனுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது டிரெயின் திரைப்படம் தயாராகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்திற்கு பின்னர் அவர் 96 படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இதோடு அவர் நடித்த ஏஸ் என்கிற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், அவர் கைவசம் உள்ள மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி அவர் இயக்குனர் ஹரி உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சிங்கம், ஆறு, சாமி, வேல் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள ஹரி, கடைசியாக விஷால் நடித்த ரத்னம் படத்தை இயக்கினார்.
இந்தப் படம் தோல்வியை சந்தித்ததை அடுத்து, கம்பேக் கொடுக்கும் முனைப்போடு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் ஹரி
இதில் மற்றுமொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை நயன்தாராவை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியதே இயக்குனர் ஹரி தான்.
அவர் இயக்கிய ஐயா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன், அப்படத்திற்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது 20 ஆண்டுகளுக்கு பின் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.
அதேபோல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் நானும் ரெளடி தான், இமைக்கா நொடிகள் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நிலையில், தற்போது ஹரி இயக்கும் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
இது குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.