புலியுடன் களமிறங்கிய விஜய் டிவி புகழ்!

புலியுடன் களமிறங்கிய விஜய் டிவி புகழ்!
  • PublishedJuly 11, 2023

விஜய் டீவியில், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த புகழ் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த படம் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் இயக்கும் இப்படத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் நாயகியாக நடித்துள்ளார். இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழ்,  நிஜ புலியுடன் இப்படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

படத்தின் பெயரை பார்க்கும் போதே படம் விலங்குகள் சம்பந்தப்பட்டது என தெரிகிறது. அதை தொடர்ந்து போஸ்டரிலும் புகழ் புலியுடன் இருப்பது போன்று இருக்கிறது. இதனாலேயே படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

pugazh-vijay-tv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *