“என் காதல் தடையாக இருந்தது… பிரேக் அப் செய்துவிட்டேன்” பிரபல நடிகை பேட்டி

“என் காதல் தடையாக இருந்தது… பிரேக் அப் செய்துவிட்டேன்” பிரபல நடிகை பேட்டி
  • PublishedDecember 12, 2023

சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ், போன்ற சீரியல்களின் நடித்த நடிகை லாவண்யா முதல் முறையாக தன்னுடைய காதலனுடன் பிரேக் அப் செய்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீப காலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகைகள் பல தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த லாவண்யாவும் ஒருவர்.

சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது படிப்பை முடித்த லாவண்யா, கை நிறைய சம்பளத்துடன் வங்கியில் பணியாற்றியவர்.

பின்னர் மாடலிங் துறையில் மீது இருந்த ஆர்வம் காரணமாக மெல்ல மெல்ல குடும்பத்திற்கே தெரியாமல் சில விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், மிகப்பெரிய பிரச்சனையே வெடித்துள்ளது. ஆரம்பத்தில் இவருடைய ஆசையை வீட்டில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், பின்னர் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’, சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா இறப்புக்கு பின்… கமிட்டான காவ்யா அறிவுமணி, திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, அவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்க துவங்கினார் லாவண்யா.இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது லாவண்யா வெப் சீரிஸ் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், வங்கியில் வேலை செய்த போது ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், பின்னர் அவரை பிரேக்கப் செய்ததன் காரணத்தை முதல் முறையாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பொதுவாக பசங்க ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தான் நான் எதிர்பார்ப்பேன்.

நீ இப்படி தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்னு, என்று கண்டிஷன் போடறது எனக்கு பிடிக்காது… அந்த வகையில் நான் வங்கியில் வேலை செய்த போது நான் செஞ்சது எல்லாம் என்னுடைய காதலருக்கு பிடித்திருந்தது.

ஆனால் மாடலிங் துறையில் நுழைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. என்னுடைய வாழ்க்கையில் நான் அடுத்த கட்டத்திற்கு போக அந்த காதல் தடையாக இருந்ததால், அவரை பிரேக்கப் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *