தனி ஒருவன் 2.. படத்தின் வில்லன் யார்? மாபெரும் வாரிசு நடிகருக்கு வலைவீச்சு

தனி ஒருவன் 2.. படத்தின் வில்லன் யார்? மாபெரும் வாரிசு நடிகருக்கு வலைவீச்சு
  • PublishedDecember 12, 2023

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் வெளியாகி சுமார் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெற்ற திரைப்படம் தான் “தனி ஒருவன்”. பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்கள் பலர் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்று கூறினால் அது தனி ஒருவன் திரைப்படத்திற்கு தான் இன்று கூறினால் அது மிகையல்ல.

அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக தனி ஒருவன் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் சபாஷ் பெற்றார் மோகன் ராஜா.

மித்ரன் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி அவர்களும், சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக அரவிந்த் சாமி அவர்களும், மகிமா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் மிக நேர்த்தியாக நடித்து வெளியான ஒரு திரைப்படம் தனி ஒருவன்.

பல வருட காத்திருப்புக்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது குறித்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலை ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தனி ஒருவன் படத்தை பொறுத்தவரை, வில்லன் கதாபாத்திரம் ஹீரோவிற்கு நிகரான கனம் கொண்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக முதலில் நடிகர் மாதவன் அவர்களிடமும் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்களான அமீர்கான் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இறுதியாக தற்பொழுது இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் உலகில் சாயின்ஷாவாக இருக்கும் அமிதாப் பச்சன் அவர்களுடைய மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான டெஸ்ட் சூட் நடத்தும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *