தலைவர் பிறந்த நாள் ட்ரீட் இன்று மாலை வெளியாகின்றது….

தலைவர் பிறந்த நாள் ட்ரீட் இன்று மாலை வெளியாகின்றது….
  • PublishedDecember 12, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் 170வது படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 170வது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தை “ஜெய் பீம்” திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் அவர்களுடன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே திருநெல்வேலி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *