மீண்டும் வந்த ஆளவந்தான் மற்றும் முத்து… வென்றது யார் தெரியுமா?

மீண்டும் வந்த ஆளவந்தான் மற்றும் முத்து… வென்றது யார் தெரியுமா?
  • PublishedDecember 11, 2023

தற்போதைய காலக்கட்டத்தில் மறுவெளியீட்டிலும் பல படங்கள் வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் மெருகூட்டலுடன் தைரியமாக படங்களை வெளியிடுகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்த முத்து, வித்தியாசமான முயற்சியில் கவனம்பெற்ற கமல்ஹாசனின் ஆளவந்தான் படமும் டிச.8ஆம் தேதி வெளியாகின.

புதிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது சாதாரணம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய, நன்றாக இருந்தும் கவனிக்கப்படாத திரைப்படங்களை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வசூலில் நடிகர் கமல்ஹாசன், ரஜினியை முந்தியுள்ளார். ஆளவந்தான் ரூ.15 இலட்சமும் முத்து ரூ.7 இலட்சமும் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல்ஹாசனின் படங்கள் காலம் தாண்டி நிற்கும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *