“டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய்”

“டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய்”
  • PublishedDecember 11, 2023

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஏற்பட்ட டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவௌர்கிறார். அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இந்த நிலையில் இமானின் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. சிவகார்த்திகேயனோ இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார்.

அதேசமயம் இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுப்பதற்கான திட்டமிட்ட சதி என்றும் வேண்டுமென்றே இமான் இப்படி பேசுகிறார் என்றும் எஸ்கேவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

சூழல் இப்படி இருக்கமிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது இந்த செயலுக்கு பாரட்டு குவிந்துவருகிறது.

இந்நிலையில் அதனை ட்ரோல் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது சிவா 10 லட்சம் ரூபாய் வழங்கியதை குறிப்பிட்டு, டேமேஜ் கன்ட்ரோல் மோட் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இமான் விவகாரத்தில் சிவாவின் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. அதனை சரி செய்துகொள்ளவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *