அரசியலில் களம் காணும் விஜய் : இவரை எதிர்க்கத்தானாம்!
நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதற்கிடையே அவர் அரசியலில் களம் காணப்போகிறார் என்ற தகவலும் வைரலாகிவருகிறது.
தற்போது பிரபல யூடியூபர் ஒருவர் விஜயின் அரசியில் பார்வை எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
அதாவது விஜய் தற்போது சினிமாவில் இருக்கும் வரை அவருக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆதரவு ரொம்பவே அதிகம் தேவைப்படுகிறது. அதனால் விஜய் கண்டிப்பாக நேரடியாக திமுக அரசை எதிர்க்க மாட்டார்.
அதே நேரத்தில் விஜய் எதிர்க்கப்போவது எதிர்க்கட்சியான அதிமுக கட்சியும் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் என்பது உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தான் இருக்கும் என அந்த யூடியூபர் கூறியிருக்கிறார்.
எப்பொழுது உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் மொத்த அதிகாரத்தையும் தன் கையில் எடுக்கிறாரோஇ அந்த நேரம் விஜய் அரசியல் களம் காணுவார் என்பது போல் இவர் சொல்லுகிறார்.
அதற்காகத்தான் விஜய்யின் அரசியல் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை குறி வைத்தே நடக்கிறது என்றும், உதயநிதி நேரிடையாக அரசியலில் களம் காணும் பொழுது அவரைவிட தளபதி விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கும். இதுதான் அவருடைய திட்டம் என்றும் சொல்லி இருக்கிறார்.
நடிகர் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் குருவி பட சமயத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்துவிட்டதாக கூறினாலும், உண்மையில் இருவருக்குள்ளும் பிரச்சினை ஒன்று இருப்பதாகத்தான் பேசப்படுகிறது.