விஜயகாந்த் மட்டும் இல்ல… மற்றுமொரு இறந்த பிரபலமும் GOAT படத்தில் இருக்கப்போறாங்க

விஜயகாந்த் மட்டும் இல்ல… மற்றுமொரு இறந்த பிரபலமும் GOAT படத்தில் இருக்கப்போறாங்க
  • PublishedJune 14, 2024

வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய் உடன் கூட்டணி வைத்து GOAT படத்தை எடுத்திருக்கிறார். இவர்கள் இருவருடைய காம்பினேஷன் எந்த மாதிரி ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அமையும்.

அத்துடன் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், லைலா, சினேகா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் பண்ண தயாராகி விட்டார்கள்.

அந்த வகையில் அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்தி பல சாகசங்களை செய்து காட்டி வருகிறார். இதனால் மறைந்த விஜயகாந்த் அவர்களை நினைவூட்டும் விதமாக விஜய் உடன் சேர்த்து வைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று AI டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் க்கு சில காட்சிகள் கொடுத்து அமைத்திருக்கிறார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இந்த ஒரு தருணத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை இன்னும் மெருகேற்றும் வகையில் இளையராஜாவின் மகள் பவதாரணியை கௌரவிக்கும் விதமாக அவருடைய சொந்த குரலில் ஒரு பாடலை AI தொழில்நுட்பத்துடன் யுவன் உருவாக்கப் போகிறார்.

அந்த வகையில் வருகிற இந்த பாடல் ஒரு மென்மையான மெலடி பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ விஜய்க்கு இப்படத்தின் மூலம் வெற்றி கிடைத்தால் ரசிகர்களுக்கு அதுவே மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *